சென்னையில் ‘சான்ட்விச் ஸ்கொயர்’ என்கிற பெயரில் உயர்தர அசத்தல் உணவகம் திறப்பு – கீழக்கரை சட்டப் போராளியின் சுவைமிகு துவக்கம்

சென்னையில் இனி ‘சான்ட்விச்’ சாப்பிடணுமா…? 143 வகையான சான்ட்விச் அயிட்டங்களை வழங்கி வாடிக்கையாளர்களை திக்குமுக்காட வைத்து கொண்டிருக்கிறது ‘சான்ட்விச் ஸ்கொயர்’ உணவகம். நல்ல ருசிமிகுந்த வகையறாக்களை தேடித் தேடி ருசி பார்த்து சாப்பிடும் ‘சான்ட்விச் பிரியர்களுக்கு இனி கொண்டாட்டம் தான். டார்க் சாக்லேட் சான்ட்விச், நட்டெல்லா சான்ட்விச் என்று புதுவிதமாக வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்து கொண்டிருக்கிறது.

இந்த ‘சான்ட்விச் ஸ்கொயர்’ உணவகத்தை சென்னை ஊரப்பாக்கம் G.S.T சாலையில், கீழக்கரை சின்னக்கடை ஈஸா தண்டையல் தெருவை சேர்ந்த சட்டப் போராளி. அஹமது கடந்த 05.02.18 அன்று திறந்துள்ளார். இந்த ‘சான்ட்விச் ஸ்கொயர்’ உணவகம் இந்தியா முழுவதும் 7 பெரும் நகரங்களில் 50 க்கும் மேற்பட்ட கிளைகளை திறந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இங்கு ‘சான்ட்விச் மட்டுமின்றி பீட்சா, பர்கர், பாஸ்தா, மேகி, ஐஸ்கிரீம், மில்க்க்ஷேக் என்று நாவிற்கினிய உணவு வகைகள் அனைத்தும் கிடைப்பது அனைவருக்கும் மகிழ்ச்சி தான். கீழக்கரை சட்டப் போராளி அஹமது இனிதே துவங்கியுள்ள சென்னை ‘சான்ட்விச் ஸ்கொயர்’ மாபெரும் வெற்றி பெற கீழை நியூஸ் வலைதளம் மனதார வாழ்த்துகிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!