ஆத்தூர் தாலுகா பகுதியில் கனிமவளங்கள் கொள்ளை!!வீடியோ..

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர்,சித்தையன் கோட்டை, நரசிங்கபுரம் பகுதியில் மனல்,செம்மன் போன்ற கனிம வளங்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் பகிரங்கமாக ஜேசிபி எந்திரங்கள் உதவியுடன் டிராக்டர் மூலமாக அள்ளப்படுகிறது. குறிப்பாக சித்தையன் கோட்டை பேரூராட்சி குப்பை சேகரிப்பு கிடங்கின் அருகாமையில் உள்ள தனிநபருக்கு சொந்தமான இடத்தில் இருந்து செம்மன் திருட்டு பலநாட்களாக நடந்த வண்ணம் உள்ளது.

இதனால் அருகில் உள்ள உயர்அழுத்த மின்கோபுரம் மன் அரிப்பினால் சாய்ந்து விபத்து ஏற்படும் நிலையில் உள்ளதாலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்துவதோடு இதுபோன்ற செயள்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து எதிர்கால சந்ததியரின் வாழ்வாதாரமாக திகழும் இயற்கை வளங்களை பாதுகாத்திடுமாறு சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தியாளர். ப.அழகர்சாமி, ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!