திருப்புல்லானியில் இருந்து சேதுக்கரை செல்லும் வழியில் அதிகரிக்கும் மணல் கொள்ளை…

திருப்புல்லாணியில் இருந்து சேதுக்கரை செல்லும் ரோட்டில் மேலப்புதுக்குடி அருகே அனுமதியில்லாமல் மணல் கொள்ளையடிப்பதாக அங்குள்ள மக்கள் கூறுவதை அறிந்து கொள்ள அங்கு சென்ற பொழுது, 30 அடி அகலம், ஆறடி பள்ளத்தில் கிலோ மீட்டர் தூரத்துக்கு மண் அள்ளப்பட்டு அங்குள்ள பல பனை மரங்கள் வீழ்ந்தும், இன்னும் பல வீழக்கூடிய நிலையிலும் இருந்தது வேதனையான காட்சியாக இருந்து.  நீங்கள் காணும் புகைப்படம் அனைத்தும். 10/09/2018 அன்று காலையில் எடுக்கப்பட்டது.

அப்பகுதியில் பிள்ளையார் கூட்டம் ஊரணியில்  தண்ணீர் பிடிக்க வந்தவர்களிடம் கேட்ட பொழுது, அவர்கள் காட்டியது போல் அரை கிலோ மீட்டர் தூரம் சென்ற பொழுது மண் அள்ளுவதற்கு சாட்சியாக பொக்லைன் இயந்திரம்  சாட்சியாக நின்றது.

அங்குள்ள பனை மரங்கள் தன் வேர்களை இழந்து தண்ணீர் வளத்தையும் இழந்த வண்ணம் காட்சியளித்தன.  அரசு அதிகாரிகளுக்கு இந்த ஈவு இரக்கமற்ற மிருகங்கள் மீது கண் படுமா?? இயற்கை வளம் காக்கபடுமா??

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!