மணல் திருட்டில் ஈடுபட்ட 3 வாகனங்கள் பறிமுதல் 6 பேர் கைது…

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே சேக்கன் திடலில் நள்ளிரவு நேரத்தில் வாகனங்களில் மணல் திருட்டுத்தனமாக அள்ளப்படுவதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து சேக்கன் திடல் கிராம நிர்வாக அலுவலர் பழனிச்சாமி தொண்டி போலீசில் புகார் கொடுத்தார்.

இதன்படி சேக்கன் திடல் பகுதியில் 27 .8.2018 அதிகாலை 3 மணியளவில் தொண்டி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு மணல் அள்ளிய வாகன ஓட்டிகளிடம் வருமான துறை அனுமதி குறித்து போலீசார் விசாரித்தனர். எவ்வித அனுமதியில்லை என தெரிந்தது. இதையடுத்து மணல் திருட்டில் ஈடுபட்ட 3 டிப்பர் லாரிகள், 1 ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். சிறுநல்லூர் செந்தில்குமார் 30, கருகுவயல் முனியராஜ் 32, உப்பூர் தெற்கு ஊரனகுடி கமலேஷ் 18, தேவிபட்டினம் மாதவனூர் ராஜமுகமது 19, சிறுவனூர் அன்பு கடல் 30, உசிலனகோட்டை ஆனந்த் 28 ஆகியோரை போலீஸ் எஸ். ஐ., மாரிச்சாமி கைது செய்தார். கோவிந்தமங்கலம் நாகேந்திரன், கீழ்குடி மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கனிமவள பாதுகாப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து தேடி வருகிறார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!