கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையில் கூடுதல் பஸ் நிலையம் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போது, அந்த வழியாக சென்ற 4லாரிகளை சோதனையிட்ட போது மணல் இருந்தது தெரியவந்தது. ஆனால் மணல் ஏற்றி செல்வதற்கான எவ்வித உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது தெரிய வரவே போலீசார் 4 லாரிகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் விருதுநகர் பகுதிகளில் இருந்து சட்ட விரோதமாக மணல் அள்ளி நெல்லைக்கு கொண்டு செல்லப்படுவது தெரிய வந்ததது. இதனை தொடர்ந்து மணல் ஏற்றி வந்த லாரி டிரைவர்கள் கீழப்பாட்டத்தினை வடிவேல்(31), அதை ஊரைச் செல்லத்துரை(37), சன்னதி புதுக்குடியை சேர்ந்த ரவி(43), முதுமலைக்கொழுந்தபுரத்தினை சேர்ந்த உய்யக்காட்டன்(39) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


You must be logged in to post a comment.