பெரியபட்டிணத்தில் மணல் கொள்ளையின் உச்ச கட்டமாக பெரியபட்டிணம் தங்கையா நகரில் உள்ள ஹிந்துக்களின் சுடுகாட்டில் மண் தோண்டிய சம்பவம் பெரும் பரப்பரபை ஏற்படுத்தியுள்ளது. பெரியபட்டிணத்தை சேர்ந்த சேணா என்பவரும் இன்னும் சிலரும் சேர்ந்து எவ்வித அனுமதியும் பெறாமல் ஹிந்துக்களின் சுடுகாட்டில் புல்டோசர் மூலம் மண் அள்ளியுள்ளனர். அவ்வாறு மண் அள்ளிய பொழுது புதைக்கப்பட்ட பிணங்களும் வெளியே வரத் தொடங்கியுள்ளது. இதைப் பார்த்த அங்குள்ள சிறுபான்மையினர் மண் அள்ளியவர்களைக் கேட்ட பொழுது திருப்புல்லானி BDO மற்றும் இராமநாதபுரம் கலெக்டரிடம் அனுமதி பெற்றுள்ளதாக கூறியுள்ளார்கள்.

மணல் கொள்ளையின் உச்சகட்டம் சுடுகாடுகளை தோண்டி பிணத்தையும் சேர்த்து அள்ளும் வரை வந்துள்ளது. பெரியபட்டிணம் சுற்றுவட்டாரத்தில் பாதிக்கப்பட்ட சமூகத்தினர் பெரும் கொதிப்பான மனநிலையில் உள்ளனர். இவ்வாறு பணத்திற்காக மனிதாபிமானமற்ற முறையில் சுடுகாட்டை தோண்டியுள்ளது மிகவும் கண்டிக்கதக்க செயலாகும் . இச்சம்பவம் இன மோதலாக ஏற்படுவதற்கு முன்னர் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதேபோல் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் பெரியபட்டினம் அம்மன் கோவில் ஊரணி பகுதியில் மணல் விற்பனை SDPI கட்சி நிர்வாகிகள், PFI உறுப்பினர்கள் மற்றும் ஊர் இளைஞர்கள் ஒத்துழைப்புடன் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்தப் பகுதியில் முறையில்லாமல் மண்ணை அள்ளியதால் முத்தரி தோப்புக்கு போடப்பட்ட சிமின்ட் ரோடும் ஒடைந்து நாசம்மாகிவிட்டது. இந்த விசயத்தில் அரசு அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நிரந்தர தீர்வு காண்பார்களா??



Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









