தூத்துக்குடி கடற்கரையில் தேர்தல் விழிப்புணர்வு மணல் சிற்பம்!

த்துக்குடி முத்துநகர் கடற்கரையில் வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மணல் சிற்பத்தை ஆட்சியர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்தார். தமிழகம் முழுவதும் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் மூலம் தேர்தல் விழிப்பு உணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் வாக்காளர்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி இன்று திறந்து வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், ” வாக்காளர்கள் அனைவரும் தங்களது வாக்கினை பதிவு செய்யும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வரும் தேர்தலின் நோக்கம், எந்த ஒரு வாக்காளரும் விடுபட்டு விடக் கூடாது என்பதுதான். இது தவிர, இந்த தேர்தலில் மற்றொரு முக்கிய அம்சமாக மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தங்களது வாக்கினை சிரமமின்றி செலுத்த வேண்டும் என்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் வாக்காளர் விழிப்புணர்வு மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வாக்குப்பதிவு மற்றும் ஜனநாயக கடமையை உணர்த்தும் வகையில் இந்த சிற்பத்தினை சிற்பி அமைத்துள்ளார். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முத்துநகர் கடற்கரையும் ஒன்று. அதனால், இங்கு வரும் மக்கள் மணல் சிற்பத்தின் மூலமாக சொல்லப்படும் கருத்துக்களை உள்வாங்கி விழிப்புணர்வு அடைவர்.” என்றார்.

இந்த மணல் சிற்பத்தை உருவாக்கிய சிற்பி சசிவர்மா கூறுகையில் “வாக்குரிமை என்பது மக்களின் ஜனநாயக கடமைகளில் ஒன்று. அதனை வலியுறுத்தும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி கடற்கரையில் இந்த மணல் சிற்பத்தை அமைத்துள்ளேன். வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் தங்களது வாக்குரிமையை பயன்படுத்தி ஜனநாயக கடமை ஆற்றிட வேண்டும் என்பதை முதன்மையாக கொண்டு உருவாக்கியுள்ளேன்.” என்றார். இந்த மணல் சிற்பத்தினை மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!