சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் – சி.ஐ.டி.யூ மாநில தலைவர் செளந்தரராஜன் பேட்டி.
4 அமைச்சர்கள், அதிகாரிகள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாட்டுக்கு வந்துள்ளோம். நாளை எங்களது பேரவைக் கூட்டம் நடக்க உள்ளது. அதில் நல்ல முடிவு எடுக்கப்படும்.
நிர்வாகத்திற்கும் சங்கத்திற்கும் இடையே ஒரு தொடர்பு, இந்த பேச்சுவார்த்தையால் ஏற்பட்டுள்ளது. எதையும் ஒத்துக்கொள்ள மாட்டோம் எனக் கூறிய நிர்வாகம், அமைச்சர்களின் அழுத்தத்தால் தற்போது பேச முன்வந்துள்ளது. அரசின் நடவடிக்கைக்கு பாராட்டுகள்.
தொழிற்சங்கப் பதிவு அங்கீகாரம் என்பது எங்களது உடனடி கோரிக்கையெல்லாம் இல்லை. சங்க அங்கீகாரத்தையும், சங்கம் பதிவு செய்வதையும் குழப்பிக்கொள்ள வேண்டாம். இன்று நடந்த பேச்சுவார்த்தை திருப்தி அளித்துள்ளது
You must be logged in to post a comment.