மது ஒழிப்பு போராளி காந்தியவாதி சசிபெருமாள் நினைவு தினம் அனுசரிப்பு

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இடங்கணசாலை கிராமம் இ. மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த காந்தியவாதி சசிபெருமாள் இவர் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார்.இந் நிலையில் கடந்த 31.07.2015 அன்று கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் பகுதியில் உள்ள செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியபோது உயிரிழந்தார் ..அவருடைய 4 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (31.07.19) அனுசரிக்கப்பட்டது.. இதையொட்டி அவரது நினைவிடத்தில் சசிபெருமாள் மகன் விவேக் சசிபெருமாள் தம்பி செல்வம் மகன்கள் அப்புசாமி தியாகு உட்பட குடும்பத்தினரும், உறவினர்கள் சுப்ரமணி அம்மாசி ரகுபதி சிவகாமி மற்றும் அமரகுந்தி அருணாச்சலம் உள்பட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்…

சேலம், ரகுபதி

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!