புதுயுகம் படைக்கும் சேலம் இளைய சமுதாயம்.. அரசு பள்ளியை மேம்படுத்தும் இளைஞர்கள்..

சேலத்தில் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளை போன்று மாற்றியமைத்து ஏழை எளிய மாணவ மாணவிகளின் படிப்பை மேம்படுத்த சேலம் இளைஞர்   குழு என்ற அமைப்பினர் முன்வந்துள்ளனர்.

அதன் முதல் கட்ட பணியாக கடந்த 24-06-2018 அன்று சேலம் மாநகராட்சி பள்ளிக்கு புதிதாக  கழிவறைத் தொட்டி இலவசமாக தாங்களே அமைத்துக் களப்பணி ஆற்றியுள்ளனர். மேலும் அரசு பள்ளிகளை தனியார் பள்ளியைப் போன்று மாற்றியமைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு  தங்களை இப்பணியில் முழுமையாக அர்ப்பணித்துள்ளனர்.

இப்பணியில் ஈடுபட்டுள்ள இந்த இளைய சமுதாயம் நிச்சயமாக போற்றுதலுக்குரியவர்கள், வாழத்தப்பட வேண்டியவர்கள் மற்றும் இது போன்ற செயல்பாடுகள் ஊக்கப்படுத்துதல் அவசியமாகும்.

மேலும் இப்பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் கூறியதாவது,  “இந்த பணிகளுக்கு பொதுமக்கள் அனைவரும் எங்களுக்கு உதவ முன்வர வேண்டும், இன்னும் சிறப்பாக செய்ய முடியும்” என்றனர்.

சேலம்  இளைஞர் குழு அமைப்பினரின் ஏழை எளிய மக்களுக்கான இந்த கல்விப்பணி பொதுமக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இப்பணியில் வருங்கால சந்ததியினர் ஒவ்வொருவருக்கும் படிப்பினைகள் உள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!