இளம்பிள்ளையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி போராட்டம்!
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை, இடங்கணசாலை, நடுவனேரி, வேம்படிதாளம், தப்பக்குட்டை, கே_கே_நகர், கல்பாரப்பட்டி, பெருமாகவுண்டம்பட்டி, மகுடஞ்சாவடி, காக்காபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பீகார், அசாம், ஒடிசா, உத்தரபிரதே சம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 5 ஆயிரத் திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விசைத்தறி, ஜவுளி மற்றும் அதன் சார்புடைய பல்வேறு தொழில்களில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 45 நாள்க ளுக்கு மேலாக தொழில் முடக்கம் ஏற்பட்டது.
இதனால் வருமானம் இன்றி, உணவு கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
இதனால் தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி அந்தந்த கிராம நிர் வாக அலுவலகத்தில் இதுவரை 2000 க்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், இதுதொடர்பாக எவ்வித உரிய நட வடிக்கையும் அரசு நிர்வாகம் மேற் கொள்ளவில்லை எனக்கூறி சனி யன்று 300க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் மகுடஞ்சாவடி காவல் நிலைய உதவி மையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அறிந்த மகுடஞ்சாவடி_காவல்_துறையினர் சாலையில் இருந் தவர்களை அப்புறப்படுத்தி பேருந்து நிலையம் உள்ளே அழைத்துச் சென்று, அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், இன்னும் மூன்று நாட்களில் தங்கள் ஊருக்கு அனுப்ப வழிவகை செய்யப்படும் என உறுதி யளித்த பின்னரே கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


You must be logged in to post a comment.