மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வகுரணி கிராமத்தில் பெரிய கண்மாய் உள்ளது. இதன் அருகில் உள்ள நல்லுத்தேவன்பட்டி கண்மாய் நிரம்பி, குருவிளாம்பட்டி கண்மாய்க்கு தண்ணீர் திறக்கப்பட்டு, அதற்கு பிறகு வகுரணி கண்மாயக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீரை திறந்து விட்டனர்.. ஆனால் திறந்த மறுநாளே தண்ணீரை நிறுத்திவிட்டு அசுவமாநிதி ஓடை வழியாக வடுகபட்டி கண்மாய்க்கு தண்ணீரை திறந்து விடப்பட்டதால் பொதுமக்கள், விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கிராம மக்கள் முறையிட்டும் தண்ணீர் திறக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வகுரணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள், ஊராட்சி மன்ற தலைவர் லோகராணி மார்க்கண்டன் தலைமையில் கிராம மக்கள், விவசாயிகள் பேரையூர் ரோட்டில் உள்ள பண்ணைப்பட்டி பாலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர் . தகவலறிந்து வந்த வி ஏ ஓ சக்திகுமார், உசிலம்பட்டி போலீசார் இனைந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உசிலை மோகன்
You must be logged in to post a comment.