மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கண்ணன் தியேட்டர் அருகில் உள்ளது கள்ளர் தெரு.இத்தெருவில் சாலை வசதி அமைத்துத் தர பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.இதனையடுத்து அதிகாரிகள் பேவர் பிளாக் சாலை அமைக்க சில மாதங்களுக்கு முன் தோண்டியுள்ளனர்.ஆனால் இதுவரை சாலை வசதி அமைக்கப்படவில்லை.இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் பதில் இல்லை.இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் கண்ணன் தியேட்டர் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சம்பவமறிந்த போலிசார் பொது மக்களிடம் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதைத் தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் சிறது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.

You must be logged in to post a comment.