சக்கரக்கோட்டை இராமநாபுரம் சாலை விபத்துக்கு காரணம் நெடுஞ்சாலையில் அமைந்து இருக்கும் டாஸ்மாக்..

கடந்த ஒரு வருடமாக இராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை ஏர்வாடி செல்லும் வழியில் உள்ள சக்கரக்கோட்டை அருகே அடிக்கடி அதிகமான விபத்துக்கள் நடந்த வண்ணமே உள்ளது. ஆட்டோ, இரு சக்கர வாகனம், லாரி மீது கார் சேதம் என தொடர்ந்து விபத்துக்களால் பலி எண்ணிக்கை கூடிய வண்ணம்தான் உள்ளது.

இப்பகுதியில் நடக்கும் விபத்து எதார்த்தமாக நடக்கும் விபத்து என அவ்வளவு எளிதாக கடந்து போய் விட முடியாது காரணம் அங்கு நெடுங்சாலையில் இருந்து எளிதில் அணுகும் வகையில் அமைந்து இருக்கும் குடிகாரர்களின் புகலிடம் ஆன டாஸ்மாக் தான். இங்கு வாகன ஓட்டிகள் குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவதாலே அப்பகுதியில் அதிகமான விபத்துக்கள் எற்படுவதை அப்பகுதிக்கு சென்று டாஸ்மாக் அமைந்திருக்கும் இடத்தை பார்த்தாலே தெரியும்.

அதேபோல் அப்பகுதியில் உள்ள குடிகாரர்களால் இரவு நேரமின்று அனைத்து நேரங்களிலும் ஆட்டோக்களில் செல்லும் பயணிகளுக்கு மிகவும் தொந்தரவு ஏற்படுகிறது. அதே போல் சில மாதங்களுக்கு முன்பு கீழக்கரையில் இருந்து ஆம்னி வேனில் சென்றவர்களை வழி மறித்து தாக்குதலில் ஈடுபட்ட சம்பவமும் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு நிரந்தர தீர்வு காணும் வண்ணம் அரசு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]

One thought on “சக்கரக்கோட்டை இராமநாபுரம் சாலை விபத்துக்கு காரணம் நெடுஞ்சாலையில் அமைந்து இருக்கும் டாஸ்மாக்..

  1. டாஸ்மாக் கடைகளை நம்பித்தான் இப்ப ஆட்சி நடக்கிறது

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!