ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், சக்கரக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பெறக்கூடிய மனுக்களுக்கு 30 தினங்களுக்குள் உரிய தீர்வு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் இம்முகாம்களில் பங்கேற்று பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். அதன் அடிப்படையில் இன்று ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர் முகாமில் மாவட்டத்தின் 17 துறை சார்ந்த அதிகாரிகள் மக்களிடம் மனுக்களை பெற்றனர். ஊரகப்பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் கடந்த வாரம் துவங்கப்பட்டது. அதனடிப்படையில் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், சக்கரக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு பொதுமக்களிடமிருந்து பெறக்கூடிய மனுக்களை பதிவு செய்து அதற்குரிய மேல் நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். சக்கரக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் யாழினி புஷ்பவல்லி தெரிவிக்கையில் எங்கள் பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும் மக்கள் கொடுக்கும் மனுக்களை பெற்று 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் கொண்டு வந்த இந்த திட்டம் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

You must be logged in to post a comment.