சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கான விபத்து காப்பீடு திட்டம் கேரளா முழுவதும் விரிவாக்கம்.!
திருவாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் இது குறித்து தெரிவித்துள்ளதாவது.
மண்டல மகர விளக்கு காலங்களில் சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் விபத்தில் மரணம் அடைந்தால் அவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் நடக்கும் விபத்துக்களில் இறக்கும் பக்தர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்ற விதிமுறை இருந்தது.
இனி மண்டல காலங்களில் கேரளாவில் எந்த பகுதியிலும் விபத்தில் ஐயப்ப பக்தர்கள் இறந்தால் அவர்களின் குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் இழப்பீடாக கிடைக்கும்.
இது தவிர, இறந்த பக்தர்களின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்கு கேரளாவிற்குள் 30 ஆயிரம் ரூபாயும் பிற மாநிலங்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.
இது தவிர சபரிமலையில் மலை ஏறும் போது ஒரு பக்தர் இறந்தால், 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.
இந்த காப்பீட்டுக்காக சபரிமலையில் தரிசன முன்பதிவு செய்யும் ஒவ்வொரு பக்தரிடமிருந்தும் 5 ரூபாய் வசூலிக்கப்படும்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









