கீழை நியூஸ் கீழக்கரை ‘சட்டப் போராளிகள்’ சார்பாக நடைபெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்ட பயிற்சி வகுப்பு

அரசுத் துறை அலுவலகங்களில் ஊழல் மற்றும் இலஞ்சத்தை ஒழிக்கவும், அரசு ஊழியர்கள் பொறுப்புணர்வோடும், ஆவங்களில் வெளிப்படை தன்மையோடும் செய்யப்படுவதற்கு தகவல் அறியும் உரிமை சட்டம் பேருதவி புரிந்து நீதியை நிறுத்த சாமானியர்களுக்கு உதவுகிறது.

இந்த சட்டத்தின்படி பிரகாரம் அரசுத் துறையினரிடம் சாமானியர்கள் எவ்வாறு கேள்விகளை கேட்டு தகவல்களை பெறுவது ? அதற்கு உரிய வழிமுறைகள் என்ன.? சட்ட ரீதியாக அதிகாரிகளை எப்படி சிக்க வைப்பது ? உள்ளிட்ட விஷயங்களை சாமானியர்களுக்கு சட்ட பயிற்சி வகுப்பு நிகழ்ச்சி மூலம் கீழை நியூஸ் கீழக்கரை சட்டப் போராளிகள் இயக்கம் நேற்று நடத்தியது.

இந்நிகழ்ச்சி கீழக்கரை வடக்குத்தெரு இஸ்லாமிய அமைதி மையத்தில் நேற்று இரவு 8.30 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. இந்த சட்ட பயிற்சி வகுப்பில் ஏராளமான சமூக ஆர்வலர்கள், சட்டப் போராளிகள் கலந்து கொண்டு சட்ட பயிற்சி பெற்றனர். தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த பயிற்சி வகுப்பினை வழக்கறிஞர். முஹம்மது சாலிஹ் ஹுசைன் தகுந்த விளக்கங்களுடன் பயிற்சி அளித்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

4 thoughts on “கீழை நியூஸ் கீழக்கரை ‘சட்டப் போராளிகள்’ சார்பாக நடைபெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்ட பயிற்சி வகுப்பு

  1. சிரிப்பு சிரிப்பா வருதுங்க மொத்தம் 13பேர் இருக்காங்க

    1. லெட்டர் பேடு இயக்கத்தின் அன்பு சகோதரா.. நலமா..?

      நாங்கள் என்ன அரசியல் கட்சிகளின் செயற்குழு, பொதுக் குழு கூட்டமா நடத்தி கொண்டிருக்கிறோம்..? அல்லது நாங்கள் குவாட்டருக்கும் பிரியாணிக்கும் கும்மியடித்து டெம்போவில் ஏற்றி வரப்பெற்ற கூட்டமா.. எங்கள் கூட்டம்? சிரிப்பதை விட்டு கொஞ்சம் சிந்திக்க துவங்கு நண்பா…

      கீழை நியூஸ் கீழக்கரை சட்டப் போராளிகள் இயக்கம் சார்பாக நேற்று நடைபெற்ற தகவல் அறியும் உரிமை சட்ட பயிற்சி வகுப்பு என்பது நம் கீழக்கரை நகர மக்களுக்கு சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தி ஜனநாயக வழியில், அரசு துறை சார்ந்த நம்முடைய பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண நாம் துவங்கி இருக்கும் சிறு முயற்சி தான்.

      இது போன்ற சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் எண்ணிக்கை எங்களுக்கு பெரிதல்ல. நால்வர் மட்டுமே கலந்து கொண்டு அதில் ஒருவர் மட்டுமே சட்ட விழிப்புணர்வினை பெற்று, அரசு துறையினருக்கு கேள்விகளை கேட்டு உரிய தகவல்களை பெற்றால் அல்ஹம்துலில்லாஹ்…. இது தான் நாங்கள் நடத்திய நிகழ்ச்சியின் வழியாக பெற்ற மாபெரும் வெற்றி..

      முகத்தை மூடிக் கொண்டு லெட்டர் பேடு கட்சி நடத்தி முகநூலில் மட்டும் உலவாமல் கொஞ்சம் நெஞ்சம் நிமிர்த்தி, ஆண்மகனாய் நேர் கொண்டு வா… இன்னும் நிறைய பேசலாம் வா… நாங்கள் தயார்..? நீ தயாரா…?

      இவண்
      கீழக்கரை சட்டப் போராளிகள்

      1. கீழக்கரையில் எங்குபார்த்தாலும் சாக்கடை தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது நிறைய இடங்களில் மூடியில்லாமல் திறந்தே கிடக்கிறது இதுபற்றி நகராட்சியிடம் முறையிட்டு நிவர்த்தி செய்ய தைரியம் இருக்கிறதா கீழக்கரை சட்டப்போராளிகளுக்கு

    2. லெட்டர் பேட் இயக்கம்…தோழரே
      எண்ணிக்கை முக்கியம் அல்ல…உறுதியான நம்பிக்கையோடு களத்தில் பணியாற்றும் சிறு குழுக்கள் பல சாதனைகளை படைத்துள்ளது….

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!