மக்கள் பாதை சார்பாக இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகளை முறையாக பராமரித்தவர்களை பாராட்டி பரிசு வழங்கல்

இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்கமங்கலத்தில் பசுமை புரட்சி ஏற்பட மக்கள் பாதை சார்பாக கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ச்சியாக பல்வேறு தெருக்கள் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. மேலும் ஊரணி , கண்மாய் கரை ஓரங்களில் பனை விதைகளும் விதைக்கப்பட்டது. மேலும் மரக்கன்றுகளை பாதுகாக்கும் வலைக்கான ஏற்பாடுகளையும் இஸ்லாமிக் சோசியல் சர்வீஸ் மூலம் செய்யப்பட்டது.மரக்கன்றுகளை தொடர்ச்சியாக பராமரித்து வருபவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை ஒருங்கிணைப்பில் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன், இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா ஆகியோர் மரக்கன்றுகள் நடும் பணிகளை தொடர்சியாக செய்து வந்தனர்.மேலும் இராஜசிங்கமங்கலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் ஆர்வமுடன் களப்பணி செய்தனர். அனைத்து இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!