இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் பிரிட்டோ மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் விளையாட்டு போட்டி நடைபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா ஆர்.எஸ். மங்களம் கிராம ஜமாத் தலைவர் ஹாஜா நஸ்ருதீன் தலைமை நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் நலச்சங்க மாநில பொது செயலாளர் பூ.சதீஷ் வாழ்த்துரை வழங்கினார், புதுமடம் பூன் நர்சரி பிரைமரி பள்ளி தாளாளர் முகமது மன்சூர் அலி , இராமநாதபுரம் மைஸ் பப்ளிகேஷன் நிறுவனர் முருகேசன், அல் அமீன் பள்ளி தாளாளர் நைமுதீன், இன்ஜினியர் சகுபர், உமர் ஷெரீஃப், தக்வா பள்ளி இமாம் ஜெயினுதீன் , கிராம நிர்வாக அலுவலர் அஜார்தீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா ஏற்பாட்டினை பள்ளி தாளாளர் ஹாஜி எஸ் கம்ருதீன் செய்திருந்தார். இறுதியாக பள்ளியின் நிர்வாக இயக்குனர் நஸ்ருதீன் நன்றி உரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் , ஜமாத்தார்கள் ,கிராம மக்கள் , மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.




Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









