ராமநாதபுரம் மாவட்டம், ஆர். எஸ்.மங்கலம் கீழத்தெரு முத்துமாரியம்மன் கோயில் விழாவை முன்னிட்டு, முளைப்பாரி விழா நடைபெற்றது.
இக்கோயில் விழா ஜூலை 9ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் இரவில் பெண்களின் கும்மியாட்டமும் ஆண்களின் ஒயிலாட்டமும் நடைபெற்று வந்தது. விழாவின் தொடர்ச்சியாக வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை பெண்கள் கோவிலுக்கு எடுத்துச் சென்று, வழிபாடு செய்தனர். பின்பு முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்துச் சென்ற பக்தர்கள்,
அரசாள வந்த அம்மன் கோயிலில் வைத்து வழிபாடு செய்து, பின்பு அரசூரணி குளக்கரையில் கொட்டி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். விழாவை முன்னிட்டு மூலவரான அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
You must be logged in to post a comment.