ஆர்.எஸ் மங்கலத்தில் இனிப்புக்கு பதிலாக முக கவசம் வழங்கி தனது பிறந்த நாளை கொண்டாட அடம் பிடித்த சிறுவன்.முக கவசம் வழங்கி பிறந்த நாள் கொண்டாட்டம். பொதுமக்கள் பாராட்டு.

ஆர்.எஸ் மங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர்கள் கார்த்திக், கோகிலா என்ற தம்பதியின் மகன் சிறுவன் சஞ்சைக்கு நேற்று பிறந்த நாள் இச்சிறுவனின் தந்தை சமூக ஆர்வலர், தாய் செவிலியராக பணிபுரிகிறார் என்பதால் கொரோணா வைரஸ் தாக்கம் குறித்து தாய், தந்தையர் தினமும் வீட்டில் இருக்கும் பொழுது அச்சிறுவனுக்கு முக கவசம் அணிவது குறித்தும் கைகளை கழுவுவது குறித்த அவசியத்தை கூறி வந்ததன் விளைவாக தனது பிறந்த நாள் கொண்டாடும் பொழுது நமது வீட்டு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு முககவசம் கொடுக்க வாங்கி தந்தால் தான் நான் புத்தாடை அணிந்து சாமி கும்பிட்டு விட்டு பிறந்த நாள் கொண்டாடுவேன் என ஒரே பிடிவாதமாக சொல்லியுள்ளான். அதனை கேட்ட அவனது தாய், தந்தையர் தனது மகனின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக சுமார் 200 முக கவசங்களை தயார் செய்யச் சொல்லி வாங்கி வந்து தனது மகனிடம் கொடுத்தனர் .அதனை பார்த்த சிறுவன் மிகுந்த சந்தோசத்தின் உச்சிக்கே சென்று உடனே தனக்கு ஏற்கனவே எடுத்து வைத்திருந்த புத்தாடையை அணிந்து கொண்டு தானும் முக கவசம் அணிந்து கொண்டு அப்பகுதியில் உள்ள அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களுக்கு முக கவசங்களை வழங்கியதோடும், கொரோனா குறித்த விழிப்புணர்வுகளையும் பொதுமக்களிடையே ஏற்படுத்திய இச் சிறுவனின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. அத்துடன் அப்பகுதி பொதுமக்கள் புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா என்பது போல செவிலியரின் மகன் என்பதால் சுகாதாரம் குறித்து இவ்வளவு விழிப்பாக உள்ளான் என கூறி அனைவரும் சிறுவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி பாராட்டினர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!