இன்று காலை 8.30 மணி முதல் நாளை இரவு 11.30 மணி வரையிலும் இராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி, மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக இந்தியக் கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று மற்றும் நாளை கடலோரப் பகுதிகளில் 18 முதல் 22 விநாடிகள் இடைவெளியில் கடல் அலைகள் 8.25 அடி முதல் 11.50 அடி உயரத்திற்கு எழுந்து சீற்றத்துடன் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் கடல் சீற்றம் காணப்படும் அக்னி தீர்த்தம், தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடலில் இறங்கி நீராடுவதைத் தவிர்க்குமாறு மாவட்டநிர்வாகம் அறிவித்ததுள்ளது.
இதனை தொடர்ந்து பாம்பனில் 150க்கும் மேற்ப்பட்ட நாட்டுபடகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர், மேலும் இராமேஸ்வரம் அக்னிதீர்த்தம் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளில் பக்தர்கள் நீராடாததால் அந்த பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.
இதனைதொடர்ந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள புதுரோடு பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு சுற்றுலாபயணிகள் மற்றும் வாகனங்களை தனுஷ்கோடி பகுதிக்குள் செல்ல தடை விதித்துள்ளனர், இதனால் தனுஷ்கோடி பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுகின்றது.
பொதுமக்கள் கடல்சீற்றம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக 1077 என்ற அவசரகால இலவச தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிப்பதாக மாவட்டநிர்வாகம் தெரிவித்துள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










