கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் வளாகத்தில் புதிய ரோட்ராக்ட் சங்க நிர்வாகிகள் பதிவி ஏற்பு மற்றும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் அ.அலாவுதீன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.
இராமநாதபுரம் ரோட்டரி சங்க தலைவர் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இச்சங்கத்தின் தலைவராக இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் ஹசன் ஆரிஃபும், செயலளாராக மரைன் இன்ஜினியரிங் மாணவன் முஹம்மது அல்ரஹ்மானும், பொருளாளராக இயந்திரவியல் துறையைச் சார்ந்த மாணவன் நிவாஸ்குமாரும் பதவி ஏற்றுக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக சங்கத்தின் ஆலோசகர் மரியதாஸ் அனைவரைவயும் வரவேற்று பேசினார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கிழக்கரை மற்றும் இராமநாதபுரம் பகுதியில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு துரோணாச்சாரியர் விருது வழங்கி கௌவரவிக்கப்பட்டது.
இந்த துரோணாச்சாரியர் விருது கீழக்கரை மஹ்தூமியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை லலிதா, கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மெஹ்பூப் பாஸா, ஏர்வாடி அரசு மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் இரவிச்சந்திரன், முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி மெரைன் துறைத்தலைவர் சுதேவ் மற்றும் இயந்திரவியல் துறை முதுநிலை விரிவுரையாளர் கோவிந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இவ்விருதுகளை ரோட்டரி சங்க மாவட்ட துணை ஆளுநர் வழக்கறிஞர் பார்த்தசாரதி வழங்கினார்.
இராமநாதபுரம் ரோட்டரி சங்க செயலர் ஜெகதீஸ், ரோட்ராக்ட் கமிட்டி சோ்மன் கணேஷ்பாபு மற்றும் கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். இந்நிகழ்ச்சியை ரோட்டரி சங்கத்தின் பட்டயத் செயலர் பாலசுப்ரமணியம் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் நன்றியுரையை இயந்திரவியல் இறுதியாண்டு மாணவன் விக்னேஷ் வழங்கினார்.
இவ்விழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி ரோட்ராக்ட் சங்க ஆகிரிய ஆலோசகர் மரியதாஸ் மற்றும் ரோட்ராக்ட் மாணவர்கள் செய்திருந்தனர்.






You must be logged in to post a comment.