கீழக்கரையில் சிறுவர்களுக்கான இருதய சிகிச்சை முகாம் – நாடார் பேட்டை பள்ளியில் நடைபெறுகிறது

கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை அப்போலோ மருத்துவமனை சார்பில் இலவச இருதய பரிசோதனை முகாம் இன்று 19.02.2017 காலை 9 மணி முதல் நாடார் பேட்டை மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் பெற்று வருகிறது. இந்த முகாமில் பிறந்த குழந்தை முதல் 16 வயது வரை கலந்து கொண்டு ஆலோசனை பெற்று வருகின்றனர்.

இருதய அறுவை சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையில் இலவசமாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ள முன் பதிவு செய்தவர்கள், விரைந்து வந்து ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்த முகாமில் கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் அப்பாஸ் மாலிக், மாவட்ட ரோட்டரி ஆளுநர்கள் டாக்டர் விஜயகுமார், ஷாஜஹான், மாவட்ட ஆட்சியர் நடராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் அலி அக்பர், மாவட்ட சுகாதார இணை இயக்குனர் பவானி உமா தேவி, கோல்டன் ஹார்ட் கேம்பின் மாவட்ட சேர்மன் கோத்தன் தர்மன், வட்டார சேர்மன் சுகுமார், பேராசிரியர் டாக்டர் அலாவுதீன், டாக்டர் ராசிக்தீன், அப்பா மெடிக்கல் சுந்தர், நூர் ஆப்டிகல் ஹசன், எஞ்சினியர் ராஜா, இண்டோ அராப் சதக்கத்துல்லாஹ், கீழக்கரை ரோட்டரி சங்க செயலாளர் பாலசுப்ரமணியன் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள், உள்ளூர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!