மனித நேயத்திற்கு உருவம் கொடுக்கும் ரோட்டரி சங்கம்…

உலகில் சமூக நலனில் அக்கறை கொண்டு செயல்படும் பல்வேறு அமைப்புகள் உண்டு, ஆனால் அதில் என்றுமே முன்னிலை வகிப்பது ரோட்டரி கிளப் என்றால் மிகையாகாது.

ஊனமுற்றவர்களும் சமூகத்தில் சாதாரண மனிதர்களைப் போல் அன்றாட செயல்களில் ஈடுபடும் வகையில், கை மற்றும் கால்களில் உடல் ஊனமுற்றோர்களை கண்டறிந்து, அவர்களுக்கு செயற்கை உபகரணங்கள் பொருத்த முடியும் என்ற நிலையில் அந்த உதவியை செய்ய முன் வந்துள்ளார்கள் ரோட்டரி சங்கத்தினர்.

இம்முறைக்கான மருத்துவம் பெங்களூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகையால் இம்மருத்துவத்துக்கு தேர்வானவர்களை அழைத்துச்செல்லவும், தங்குவதற்கும் மற்றும் பிற செலவுகளையும் ரோட்டரி சங்கத்தினரே ஏற்றுக் கொள்ள உள்ளனர். அதுபோல் பயனாளிகள் கூட வரும் ஒரு நபருக்கும் அனைத்து செலவுகளும், வசதிகளும் இலவசமாகவே செய்யப்பட உள்ளது.

இத்திட்டத்தில் பயனடய விரும்பும் நபர்கள் ரோட்டரி கிளப் சங்கத்தினரை ஜனவரி 3 தேதி முதல் 9 ம் தேதி வரை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

கீழக்கரையில் தொடர்பு கொள்ள வேண்டிய விபரம்:- ஆசாத்: 9514033334, அசன் : 94437 43812.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!