பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் வத்தலக்குண்டு ரோட்டரி சங்கம்..
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு ரோட்டரி சங்கத்தின் சார்பாக, இலவச கல்வி உதவித் தொகையாக ரூ.30,000 வழங்கப்பட்டது.
ரோட்டரி மாவட்டம் 3000 -ன் வருங்கால ஆளுநர் RBS மணி முன்னிலையிலும், தலைவர் மருத்துவர் யூசுப் மௌலானா தலைமையில் வழங்கப்பட்டது.

நிகழ்வில் துணை ஆளுநர் மாதவன் நிகழ்ச்சியின் நோக்கம் பற்றி பேசினார்.
நிகழ்வில் உடனடி முன்னாள் தலைவர் பொன்.ரகுநந்தன் மற்றும் வத்தலக்குண்டு ரோட்டரி சங்கம் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் செயலாளர் பேராசிரியர்.மகேந்திர பாண்டியன் நன்றி தெரிவித்தார்.
You must be logged in to post a comment.