இராமநாதபுரத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் மாணவர்களுக்கு நோட்டு..

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ரோட்டரி சங்கம் சார்பில் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் உச்சிப்புளி துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்கும் விழா நடந்தது. தலைவர் எஸ்.செந்தில் குமார் வரவேற்றார். மாவட்ட முன்னாள் ஆளுநர் சின்னத்துரை அப்துல்லா சீருடைகளை வழங்கினார்.

இராமநாதபுரம் ரோட்டரி சங்க தலைவர் கே.காந்தி முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் ரோட்டரி சங்க பட்டயத் தலைவர் ஆ.ரவிச்சந்திர ராமவன்னி, உச்சிப்புளி ரோட்டரி சங்க பட்டய தலைவர் வி.என்.நாகேஸ்வரன், வழக்கறிஞர்கள் எம்.சோமசுந்தரம், முனியசாமி, இளமாறன், நகர் வர்த்தக சங்க தலைவர் அசாரியா, தலைமை ஆசிரியை லலிதா, ஆசிரியை மஞ்சுளா உள்பட பலர் பங்கேற்றனர். செயலாளர் கே.தாமரைச்செல்வன் நன்றி கூறினார். முன்னாள் தலைவர் காமில் ஹுசைன், தலைவர் தேர்வு அபுதாஹிர், பாலகிருஷ்ணன், தனசேகரன், சிவகுமார், மஹ்துன் மைதீன், இத்ரீஸ் முகமது, சகுபர் சாதிக், சேகர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்..

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!