கீழக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பாக சர்க்கரை நோய் பாத சிகிச்சை முகாம்..

கீழக்கரையில் இன்று (23/12/2018) சதக்கத்துன்  ஜாரியா நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கீழக்கரை  ரோட்டரி சங்கம் மற்றும் மதுரை சர்க்கரை நோய் பாத சிகிச்சை  சார்பில் இலவச சர்க்கரை நோய் பாத சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இம்முகாமிற்கு கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார்.  மேலும் வட்டார மருத்துவ அலுவலகர் ரோட்டரி ராசீக்தீன் துவக்கி வைத்தார். பின்னர் பாத சிறப்பு மருத்துவர் சரவணபாபு சர்க்கரையினால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி விளக்கினார்.

இந்நிகழ்வில் ரோட்டரி சங்க பொருளாளர் முனியசங்கர்,  வழக்கறிஞர் கேசவன், சேக் உசேன், நூகு,தர்மராஜ், சிவகார்த்திக் மற்றும் பல உறுப்பினர்கள் கலந்து  கொண்டனர். இம்முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியாக ரோட்டரி சங்க செயலாளர் செய்யது முகம்மது ஹசன் வருகை நன்றியுரையாற்றினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!