போலியோ இல்லாத உலகம் உருவாக்க 96 ஆயிரம் கோடி செலவீடு.ரோட்டரி பன்னாட்டு இயக்குனர் தகவல்

போலியோ நோய் இல்லாத உலகத்தை உருவாக்க ரோட்டரி இயக்கம் அரசு அமைப்புக்களுடன் இணைந்து ரூபாய் 86 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளதாக ரோட்டரி பன்னாட்டு இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.முருகானந்தம் தெரிவித்தார். இது பற்றிய விவரம் வருமாறுபிளாசம் ரோட்டரி சங்கம்.:::மதுரை பிளாசம் ரோட்டரி சங்கம் சார்பில் ஒவ்வொரு வருடமும் நிரல்யா சிறப்பு நிகழ்ச்சி மதுரை எம்பி மகாலில் நடைபெற்றது. பிளாசம் ரோட்டரி சங்கத் தலைவர் கிருபா தியானேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் ரேவதி குமரப்பன் அறிக்கை வாசித்தார்.நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்டம் 3000 ஆளுநர் தேர்வு ராஜா கோவிந்தசாமி ஆளுநர் நியமனம், பெரம்பலூர் கார்த்திக், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் அசோக், முருகானந்த பாண்டியன், உதவி ஆளுநர் லட்சுமி பன்சிதர் உட்பட பலர் பங்கேற்றனர். ரோட்டரி பன்னாட்டு இயக்குனர் விழாவில் ரோட்டரி அகில உலக பன்னாட்டு இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ள எம். முருகானந்தம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்திட்ட பெண்மணிகளுக்கு விருது வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது ரோட்டரி இயக்கம் கல்வி, சுகாதாரம், குடிநீர், உலக அமைதி, பொருளாதாரம், உட்பட பல்வேறு துறைகளில் பெரும் பங்கு வகித்து வருகிறது. ரோட்டரி இயக்கத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதில் பெண்கள் பெரும் பங்கு வகித்து வருகிறார்கள். ரூபாய் 96 ஆயிரம் கோடி ரோட்டரி பன்னாட்டு இயக்கம் சார்பில் அரசு அமைப்புக்களுடன் இணைந்து 86 ஆயிரம் கோடி ரூபாய் போலியோ நோயில்லாத உலகத்தை உருவாக்க செலவிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ரோட்டரி சார்பில் போலியோ நோய் இல்லாத உலகம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ரோட்டரி சார்பில் உக்ரைன் மற்றும் ரஷ்யா போன்ற போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 120 கோடி ரூபாய் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டிருக்கிறது.இவ்வாறு ரோட்டரி பன்னாட்டு இயக்குனர் முருகானந்தம் பேசினார். விழாவில் அரசு பள்ளிக்கு ரூபாய் 2 கோடி வழங்கிய பூரணம்மாள், பாம்பு பிடிக்கும் வீராங்கனை மணிமேகலை, ஐநா சபையில் பங்கேற்று பேசிய பிரேமலதா, மனநலம் குன்றியோருக்கு உதவும் அருணா, பாரா ஒலிம்பிக் வீராங்கனை தீபா ஆகியோருக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. முடிவில் பிளாசம் ரோட்டரி சங்க செயலாளர் ரேவதி குமரப்பன் நன்றி கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!