கீழக்கரையில் ரோட்டரி சங்கம் – சென்னை அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச இருதய பரிசோதனை முகாம்

கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை அப்போலோ மருத்துவமனை சார்பில் இலவச இருதய பரிசோதனை முகாம் 19.02.2017 அன்று ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நாடார் பேட்டை மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பிறந்த குழந்தை முதல் 16 வயது வரை கலந்து கொண்டு ஆலோசனை பெறலாம்.

இருதய அறுவை சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையில் இலவசமாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ள முன் பதிவு அவசியம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!