மதுரை மாநகர் சர்வேயர் காலனியைச் சேர்ந்த முனியசாமி என்பவர் கடந்த 12.10.2019-ம் தேதி தனது Innova காரில் ஓட்டுநர் இளையராஜா என்பவருடன் மதுரை அண்ணாநகரில் உள்ள ஒரு அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
ஓட்டுநர் காரை அருகிலிருக்கும் வேலா பார்மஸி எதிரே நிறுத்தி விட்டு காருக்குள் அமர்ந்திருந்தபோது 50 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் ஓட்டுநரது கவனத்தை திசை திருப்பி காருக்குள் இருந்த ரூ.5,00,000/- பணம் மற்றும் கையொப்பமிட்ட Union Bank, SBI Bank Cheque புத்தகங்கள் டைரி ஆகியவை இருந்த சூட்கேஸை திருடிச்சென்றுவிட்டதாக அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபரை விரைவில் பிடிக்க மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிசன் தேவாசீர்வாதம் இ.கா.ப., உத்தரவிட்டார். மதுரை மாநகர காவல் துணை ஆணையர் டாக்டர்.திரு.செந்தில்குமார் (குற்றம்), நேரடி மேற்பார்வையில் அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் திரு.வினோஜி அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.சங்கர் கண்ணன் சார்பு ஆய்வாளர் திரு.செந்தில் குமார், திரு. சுப்பிரமணி, திரு. பன்னீர்செல்வம், தலைமை காவலர் செந்தில்பாண்டி காவலர் கோபி ஆகியோர்கள் இணைந்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபரான திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த ஆபிரகாம் ஐசக் வயது 50, த/பெ அமலதாஸ் என்பவரை கடந்த 16.10.2019-ம் தேதி மதுரை மாநகர் MGR பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்து அவரிடமிருந்து ரூ.4,00,000/- பணம் மற்றும் கையொப்பமிட்ட Union Bank, SBI Bank Cheque புத்தகங்கள் டைரி ஆகியவை கைப்பற்றப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வழக்கின் எதிரியை துரிதமாக செயல்பட்டு கைது செய்த தனிப்படையினரை காவல் ஆணையர் பாராட்டினார்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









