இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஸ்ரீ நகர் முருகேசன். இவரது மனைவி ஆறுமுக கனியின் தாயார் புஷ்பம் மாள் நேற்று முன் தினம் இறந்து போனார். இதையடுத்து முருகேசன் – ஆறுமுக கனி தம்பதி அன்றைய தினம் வீட்டை பூட்டி விட்டு புஷ்பம்மாள் வீடு உள்ள அலவாய்கரைவாடி சென்றனர்.
இதையறிந்த மர்ம நபர்கள் இவர்களது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை திறந்து, அதிலிரு ந்த 60 நகை, மற்றும் ரொக்கம் ரூ.1 லட்சத்தை திருடிச் சென்றனர். இது குறித்து கீழக்கரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
போலீஸ் விசாரணையில் அறியப்பட்டது:-
அவரின் மனைவி ஆறுமுககனி தனது அம்மாவின் இறுதி சடங்கை முடித்து விட்டு வீட்டுக்கு வந்ததும் போலீசார் அவரிடம் விசாரித்ததில் அவரும் அவர் மகளும் விட்டிலிருந்து கிளம்பும் போது நெக்லஸ் மற்றும் செயினை கழுத்தில் அணிந்து சென்றதால் திருட்டிலிருந்து தப்பியது கணவர் முருகேசனுக்கும் அப்போது தெரியவந்தது, இதன் மூலம் 30க்கும் மேற்பட்ட பவுன் நகை கொள்ளையிலிருந்து தப்பியது தெரிய வந்தது ஆகவே திருடு போனது 20 பவுன் நகை மற்றும் 1லட்சத்து 7ஆயிரம் ரூபாய்தான் என்பதும் தெரியவந்தது. கீழக்கரை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்செய்தி:- முருகன், இராமநாதபுரம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









