இராமநாதபுரம், பரமக்குடி மற்றும் உச்சிபுளி பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்ற பகல் மற்றும் இரவு கொள்ளைச் சம்பவங்களை தொடர்ந்து, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீணா, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் காவல் சார்பு ஆய்வாளர் திரு.சிவசாமி அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசாருக்கு 28.11.2018-ம் தேதி கிடைத்த இரகசிய தகவலின்படி இராமநாதபுரம் ராம்நகர் பெட்ரோல் பல்க் எதிரில் உள்ள மெயின் ரோட்டிற்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான நிலையில் நின்று கொண்டிருந்த 1) ஜெயந்தன் @ ரதீசன் 26/18, த/பெ நாகலிங்கம், மண்டபம் கேம்ப், இராமநாதபுரம், 2) பார்த்திபன் @ தீபன் 27/18, த/பெ பாலகிருஷ்ணன், பொள்ளாச்சி, கோட்டூர் மலையாண்டிபட்டிணம், எஸ்.ஆர்.எஸ். கேம்ப், கோவை, 3) விஜிதரன் 32/18, த/பெ சண்முகநாதன், மண்டபம் கேம்ப், இராமநாதபுரம், 4) தர்மகுமார் @ தர்மா 37/18, த/பெ வெள்ளகுட்டி, பெருமாநல்லூர், திருப்பூர் ஆகிய நபர்களை விசாரணை செய்ததில் முன்னுக்குபின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த காவல் துறையினர் அவர்களை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில், இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீட்டை உடைத்து திருடியதாக ஒப்புக் கொண்டனர். மேலும் திருப்பூர் பெருமாநல்லூர் பகுதியில் இவர்களிடமிருந்து திருட்டு நகைகளை வாங்கிய 5) பிரதீஸ் 43/18, த/பெ குட்டப்பன் என்பவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 84 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









