திண்டிவனம் பகுதியில் இரவு நேரங்களில் லாரி டிரைவர்களிடம் கொள்ளையடித்த மூவர் கைது..

திண்டிவனம் காவல் நிலைய எல்லையில் இரவு நேரங்களில் லாரி டிரைவரை வழிமறித்து கத்தியால் வெட்டியும் காயப்படுத்தியும் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த மூன்று நபரை பிடிக்க திண்டிவனம் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் திரு.சீனி பாபு உதவி ஆய்வாளர் திரு.ரங்கராஜ், தலைமைக்காவலர் மணிமாறன், ஐயப்பன், சிவகுமார், வெற்றிவேல், முதல் நிலை காவலர் தீபன், சுந்தரமூர்த்தி, பூபாலன், செந்தில் முருகன் ஆகியோர் கொண்ட தனிப்படை குற்றவாளிகளை கைது செய்து காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இவ்விசாரணையில் மூவரும் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, கடலூர் மாவட்டம்,  வேப்பூர் ஆகிய பகுதிகளில் NH 47ல் கடந்த 3 மாதமாக இரவு நேரங்களில் சாலையோரங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள லாரி டிரைவர்களை கத்தியால் வெட்டி பணம் பறித்தது, ஏடிஎம் கார்டுகளை எடுத்து சென்று ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுத்து கொள்ளையடித்து வந்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். அதைத் தொடர்ந்து கடந்த மாதம் திண்டிவனத்தில் நடந்த வழிப்பறி குற்றத்தை ஒப்புக் கொண்டனர். பின்னர் அவர்களை Cr.no 706/18 u/s 397 ipc கீழ் குற்றவாளியை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட  அனைவரும் சென்னையில் கல்லூரியில் படித்து வரும் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: அ.சா.அலாவுதீன்.மூத்த நிருபர் ( பூதக்கண்ணாடி மாத இதழ்)- கீழை நியூஸ்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!