இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் இருக்கும் முகைதீன் டெக்ஸ்டைல்ஸ் என்னும் ஜவுளிக்கடையில் நேற்று (29/06/2021) இரவு கடையின் பின்புறம் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பல்லாயிரம் மதிப்பிலான கைலிகளை (வேஸ்டிகள்) திருடிச் சென்றனர். காலையில் வந்து கடையைத் திறந்த உரிமையாளர் முகைதீன் கடையில் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சியடைந்து கீழக்கரை காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார்.
இப்புகாரின் அடிப்படையில் கீழக்கரை சரக குற்றவியல் சார்பு ஆய்வாளர் சிவலிங்கப் பெருமாள் தலைமையில் போலீசார் கடையை சோதனை செய்தனர் பின்பு ராமநாதபுர மாவட்ட கைரேகை நிபுணர் சார்பு ஆய்வாளர் கமல் தலைமையில் போலீசார்கள் கைரேகை தடயங்களை சேகரித்தனர். பின்பு மாவட்ட மோப்பநாய் நிபுணர் கமல் தலைமையில் மோப்பநாய் உதவியுடன் குற்றவாளியை தேடி வருகின்றனர்.








You must be logged in to post a comment.