சாயல்குடியில் இரண்டு வீடுகளில் 110 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை மர்ம நபர்கள் பட்டபகலில் துணிகரம்..

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி இரு வேலியைச் சேர்ந்த அரிய மூர்த்தி மனைவி பைரவி . இன்று காலை 11 மணியளவில் இவர் வீட்டை பூட்டி விட்டு , அருகே உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றிருந்தார். மாலை 3 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முகப்பு கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவை திறந்து அதிலிருந்த 70 பவுன் நகை திருடு போனது கண்டு அதிர்ந்தார்.

சாயல்குடி விவிஆர் நகரைச் சேர்ந்தவர் ஜெயசீலன். கடலாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியர். இவரது மனைவி அமுதா, கொக்கரசன்கோட்டை ஊராட்சி செயலராக பணியாற்றுகிறார். இன்று (17/07/2019) காலை வீட்டை பூட்டி விட்டு இருவரும்  வேலைக்கு சென்றனர். அமுதா, மாலை வீடு திரும்பிய போது வீட்டு கதவு உடைக்கப்பட்டு, பீரோவை திறந்து அதிலிருந்த 40 பவுன் நகை, ரூ.2 லட்சம் திருடு போனது கண்டு திடுக்கிட்டார். திருடு போன வீடுகளில் நகை, பணம் திருடிய கும்பலின் தடயங்களை கை நிபுணர்கள் சேகரித்தனர்.

சாயல்குடி இன்ஸ்பெக்டர் கனகா பாய் தலைமையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!