கும்பகோணத்தில் தாராசுரத்தில் தனியாருக்கு சொந்தமான இந்தியன் பெட்ரோல் பங்கில்2 லட்சம் கொள்ளை 4 மணி நேரத்தில் காவல் துறையினர் கைது செய்து பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
கும்பகோணத்தில் தாராசுரம் அருகே இந்தியன் பெட்ரோல் பங்கில் இன்று அதிகாலை அதே பகுதியை சேர்ந்த 5 நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து பெட்ரோல் போட வந்துள்ளனர் அப்பொழுது பங்கில் ஒருவர் மட்டுமே பணியில் இருந்துள்ளார் அவர் பணம் இருக்கும் மேசையை சாற்று வைத்துவிட்டு பெட்ரோல் போட்டுள்ளார் அப்பொழுது ஐந்து பேரில் ஒருவன் மட்டும் பின் பக்கமாக சென்று மேசையிலிருந்த ரொக்கப்பணம் 2 லட்சத்து 35 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடினான் இந்தத் திருட்டை குறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் காவல்துறையில் புகார் அளித்தார் அதனைத் தொடர்ந்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெய்சந்திரன் உத்தரவின்படி கிழக்கு ஆய்வாளர் மகாதேவன் குற்றப்பிரிவு காவல்துறை உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன் ஆகியோர் தலைமையில் காவல்துறை வழக்கு பதிவு செய்தனர் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை இருப்பினும் தப்பி ஓடியவர்கள் அடையாளம் தெரிந்த அதே பகுதியை சேர்ந்த நபர்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
சம்பவத்தை போலீசாரின் விரைவான நடவடிக்கை காரணத்தினால் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் இருசக்கர வாகனத்தில் காரைக்கால் சென்று அங்குள்ள இரு நண்பர்களின் உதவியோடு இருந்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து கருவக்காட்டு மறந்திருந்த 5 நபர்களும் காவல்துறையினர் கண்டதும்தப்பி ஓட முயன்றனர் நந்தகோபாலன் பாலு அரவிந்த் விக்னேஷ் பிரகாஷ் ஆகிய ஐந்து நபர்களை விரட்டிச் சென்று பிடித்து கைது செய்தனர் தொகை முழுவதையும் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தையும் இரு செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.
செய்தி தொகுப்பு.அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர்.கீழை நியூஸ்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









