இராமேஸ்வரம் நடராஜபுரத்தில் வீட்டை உடைத்து 20 பவுன் நகை, லேப்டாப், செல்போன்கள் திருட்டு..

இராமேஸ்வரம் நடராஜபுரம் முனியாண்டி மகன் இலங்கை யா நேற்று வீட்டை பூட்டி விட்டு தனுஷ்கோடி கடலில் மீன்பிடிக்கச் சென்றார். இன்று மாலை அவர் வீடு திரும்பிய போது வீட்டு கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு துணிகள் சிதறி கிடந்தது கண்டு திடுக்கிட்டார். பீரோவிலிருந்த  3 செயின், 3நெக்லஸ், ஒரு ஜோடி தோடு, 6 மோதிரம், 2  கை செயின், 2செல்போன், 1லேப்டாப், ரூ. 3 ஆயிரத்தை திருடிச் சென்றது.

இதுகுறித்து தனுஷ்கோடி காவல் ஆய்வாளர் திலகராணி தலைமையில் போலீசார் விசாரித்து வருகின்றனர். தடவியல் டிஎஸ்பி முகமது யூசுப் தலைமையில் சிறப்பு தனிப்படை போலீசார் மோப்ப நாயுடன் வீட்டை சோதனை செய்து மர்ம நபர்களின் கை ரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர். இராமேஸ்வரம் தீவு பகுதியில் சமீப காலமாக வழிப்பறி, தொடர் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறுவதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!