பாப்பாரப்பட்டி அருகே தொட்லாம்பட்டியில் மாரியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் சாமி கழுத்தில் இருந்த தங்க தாலி கொள்ளை..

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த தொட்லாம்பட்டி மாரியம்மன் கோவில் பூசாரி ராமன் வழக்கம் போல் நேற்று காலை 5 மணிக்கு கோவிலுக்கு பூஜை செய்வதற்கு சென்றுள்ளார். கோவிலில் இரும்பு சங்கிலி லாக் உடைந்து இருப்பதை கண்டு தொட்லாம்பட்டி கிராம மக்களிடம் பூசாரி தெரியப்படுத்துகிறார் ஊர் மக்கள் கோவிலில் சென்று பார்க்கும்போது கோவில் சுற்று சுவர் பின்புறம் இருந்த இரும்பு கேட் உடைத்து மர்ம நபர்கள் கோவில் உள்ளே நுழைந்ததாக தெரியவருகிறது.

பின்பு சாமி கருவறை கதவு பூட்டை உடைத்து மர்ம நபர்கள் சாமி கழுத்தில் இருந்த கால் பவுன் தாலி மற்றும் உண்டியல் பூட்டை உடைத்து பணம் மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக தெரியவருகிறது இதுகுறித்து பாப்பரப்பட்டி போலீசாருக்கு தெரியப்படுத்தி உள்ளனர் பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்க்கும்போது சாமி கழுத்தில் இருந்த கால் பவுன் தங்க தாலி உண்டியல் இருந்து ஐம்பதாயிரம் பணம் மர்ம நபர்கள் திருடிச் சென்று உள்ளதாக தெரியவருகிறது பாப்பாரப்பட்டி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!