கீழக்கரையில் திடீர் என்று சாலையில் முளைத்த தடுப்பினால் வாகன ஓட்டிகள் அவதி..

கீழக்கரைக்கு வெளியூரில் இருந்து நுழையும் இடத்தில் நேற்று தீடீர் என்று காவல்துறையால் (BARRIER GUARD) தடுப்பு வைக்கப்பட்டது. இந்த தடுப்பு வளைவான இடத்திலும் அதற்கான எந்த முன்னறிவிப்பு தரும் பலகைகளும் இல்லாமல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் அந்த தடுப்பின் மீது மோதுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.

இதைப் பற்றி மக்கள் நலப் பாதுகாப்பு கழகத்தின் செய்தி தொடர்பாளர் தீன் இஸ்மாயில் கூறுகையில் திடீரென்று முளைத்துள்ள இந்த தடுப்பினால் ஆபத்துகள் விளையக் கூடிய வாய்ப்புகளே அதிகமாக உள்ளன. ஆகையால் இந்த தடுப்பை உடனடியாக அகற்ற வேண்டும் காரணம் ஒரு புறமாக வைக்கப்பட்டுள்ளதால் மறுபுறம் வரும் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமத்தை உண்டாக்கும். ஆகையால் இருபுறமும் முறையான அறிவிப்புடன் வெளிச்சம் தருவதற்கான விளக்குகள் அமைத்து வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஊருக்குள் புதிதாக வரும் இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தை தவிர்க்க முடியும் என்று தெரிவித்தார்.

சாலைகளில் முறையற்று போடப்படும் வேகத்தடைகளும், திடீரென வைக்கப்படும் தடுப்புக்களுமே விபத்து ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்பதே நிநர்சனமான உண்மை. ஆகையால் இந்தக் கோரிக்கையை காவல் துறையினர் கருத்தில் கொண்டு உடனடியாக திடீர் தடுப்பை நீக்கி முறையான தடுப்பை வைப்பதன் மூலம் விபத்துக்களை தடுக்க முடியும்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!