கீழக்கரை வடக்குத் தெரு தைக்கா பகுதியில் தரமற்ற சாலை பணி.. பொது மக்களின் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தம்..

பழைய சாலையை தோண்டி எடுத்து முறைப்படி சாலை அமைக்காமல் அதன் மேலேயே அமைத்து சாலை மட்டத்தை மேலும் உயர்த்திய காரணத்தினால் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே நாள் வடக்குத் தெரு மணல்மேடு பகுதியில் காலை துவங்கிய சாலை அமைக்கும் பணி பகல் 1 அளவில் மின்னல் வேகத்தில் முடிந்து விட்டது. இந்த நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இது போன்ற சாலை அமைக்கும் பணி கீழக்கரை நகர் முழுவதும் இப்பணிகள் நடை பெறுவதும், இந்த தரமற்ற பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிகள் தடைபெறுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.  பொதுமக்கள் விழிப்புடன் இருப்பதை உணர்ந்து அதிகாரகளும், அரசியல்வாதிகளும் சுயலாபத்தை விட்டு மக்களுக்கு தரமான பணிகளை செய்து கொடுக்க வேண்டும்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!