தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 30 வது சாலைபாதுகாப்பு விழா 07.02.19 அன்று கடையநல்லூரில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு அரசு 30 வது சாலைபாதுகாப்பு விழா “சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு” என்ற கருப்பொருளை மையமாக கொண்டு விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கிட 4 ந் தேதி முதல் வரும் 10 ந் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரம் என அறிவிக்கப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலமாக கடைபிடிக்கப்படுகிறது.அதற்கான ஏற்பாடுகளை வட்டார போக்குவரத்து அலுவலர் கருப்பசாமி செய்து கொடுத்தார்.
அதன் ஒருபகுதியாக, கடையநல்லூர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்து, பள்ளி மாணவ, மாணவியருக்கான, பேச்சு, கட்டுரை , ஓவியப் போட்டிகள், பள்ளியின் தலைமை ஆசிரியர் பாக்கிய ரூபாவதி தலைமையில் நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வட்டார போக்ககுவரத்து அலுவலர் கருப்பசாமி பரிசுகள் வழங்கி பாராட்டினார். மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த் சாலைபாதுகாப்பு குறித்து பள்ளி மாணவிகளிடம் உரை நிகழ்த்தினார்.
அதன் பின்னர் மாலை நேரத்தில் மணிக்கூண்டு அருகே சாதனா வித்தியாலயா பள்ளி மாணவ, மாணவிகளின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். அதில் சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு, சாலையில் செல்லும் போது சாலை விபத்துக்கு ஒருபோதும் நான் காரணம் ஆக மாட்டேன் என்ற வாசகம் கொண்ட பதாகைகளை ஏந்தி சென்றனர்.
அதன் பின்னர் 40 பொன்னான சாலை பாதுகாப்பு விதிமுறைகள் என்ற துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கருப்பசாமி மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த் ஆகியோர் வழங்கினர்.இதற்கான ஏற்பாடுகளை தென்காசி , கடையநல்லூர் வட்டார பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் வைகை குமார், தென்றல் ரஸுல், முத்து பயிற்சி பள்ளி மாரிமுத்து,ஜெபா பிரேம் , ஓம் நமச்சிவாயா நாராயணன், அனஸ் மைதீன், கீழப்பாவூர் விவேகானந்தர்,ஆதிலா ஜாஹீர் உசேன், பாலன் மாரியப்பன், சங்கீதம் கமால், சாரல் கண்ணன், அருன் கேபிரியல் ,கருணை ராஜா மற்றும் சாதனா ரமேஷ், கடையநல்லூர் காவலர்கள் ஆகியோர் செய்திருந்ததோடு கலந்து சிறப்பித்தனர்.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print















