தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பிப்ரவரி 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டு வருகிறது.
இன்று தூத்துக்குடி நகர காவல்துறை சார்பாக சுரேஷ் ஐ.ஏ.எஸ் அகாடமியில் பயிலும் மாணவர்கள் சுமார் 100 பேர் கொண்ட பேரணி தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., முரளி ரம்பா, தலைமையின் காலை சுமார் 10 மணிக்கு தூத்துக்குடி தீயணைப்புத்துறை சந்திப்பிலிருந்து மோட்டார்பைக்கில் ஹெல்மெட் அணிந்து கொண்டு புறப்பட்டு, தென்பாகம் காவல் நிலையம் வழியாக தூத்துக்குடி விவிடி சிக்னல் வந்தடைந்தது.
மாவட்ட எஸ்.பி.முரளி ரம்பா , சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்து சாலை விபத்துக்களை குறைப்பது குறித்து சிறப்புரையாற்றினார். பின் வாகன ஒட்டிகள் அனைவரும் உறுதி மொழி எடுத்து கையொப்பமிட்டனர்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி நகர டி.எஸ்.பி.பிரகாஷ், மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் ரேணியல் ஜேசுபாதம், தூத்துக்குடி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சிசில், சப்இன்ஸ்பெக்டர்கள் மயிலேறும் முருகன், சுந்தரம், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.





You must be logged in to post a comment.