இராமநாதபுரம் மாவட்ட காவல் , போக்குவரத்து, கல்வி துறைகள் சார்பில் 30வது சாலை பாதுகாப்பு வார விழா நடந்தது. இதனையொட்டி வாகன அணிவகுப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், சாலை விதிகளை பின்பற்றி விபத்தின்றி வாகனங்கள் ஓட்டிய காவல், அரசு போக்குவரத்து கழக டிரைவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் பரிசு வழங்கினார்.
இராமநாதபுரம் சரக காவல் துறை துணை தலைவர் என்.காமினி, காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா, முதன்மை கல்வி அலுவலர் ஆர். முருகன், வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வக்குமார் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். வாகன பேரணி நகரின் முக்கிய வீதிகளில் சென்றது. அதிவேகம், கவனக்குறைவு, சாலை விதி மீறலால் ஏற்படும் விபத்து தத்ரூப செயல் விளக்கம் பொதுமக்கள் பார்வைக்கு செய்து காண்பிக்கப்பட்டது .













You must be logged in to post a comment.