மதுரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ..

நேற்று (16.02.2019) மதுரை தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் மற்றும் வேலம்மாள் மருத்துவமனை சார்பாக சாலை பாதுகாப்பு குறித்து இலவச தலைகவசம் வழங்கும் விழா மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி, வேலம்மாள் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் ஆசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து இருசக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணம் செல்லவேண்டும் என்றும் தலைகவசம் அணிவதின் முக்கியத்துவம் பற்றியும் சாலை பாதுகாப்பு விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

மேலும் சாலையில் வாகன விபத்துக்களில் பெரும்பாலும் தலைகவசம் அணியாமல் செல்வதால் ஏற்படும் பலத்த தலைகாயத்தால் தான் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதில் இளைஞர்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக தொடந்து தலைகவசம் அணியவேண்டும் என்பதன் அவசியத்தை வழியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்சிகள் மதுரை மாநகரின் முக்கிய இடங்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதால் வாகன விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்து வருகிறது. மேலும் இதுபோன்று விழிப்புணர்வு நிகழ்சிகள் தனியார் நிறுவனங்களும் அமைப்புகளும் நடத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர் (குற்றம்), காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) மற்றும் போக்குவரத்து காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும நிர்வாகத்தினர் மற்றும் வேலம்மாள் மருத்துவமனை நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!