தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டியவர்களை பாராட்டி இனிப்பு வழங்கிய காவல்துறை…

சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் கூத்தியார் குண்டு நான்கு வழிச்சாலை சந்திப்பில் மதுரை சங்கமம் அரிமா சங்கத்தின் சார்பாக ஆஸ்டின் பட்டி காவல்துறையுடன் இணைந்து தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டி வந்தவர்களை பாராட்டி இனிப்புகள் வழங்கப்பட்டன. தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி ஒந்தவர்களுக்கு தலைக்கவசம் அணிவது குறித்தும் விபத்தை தடுப்பது குறித்தும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டன.

சுமார் 200 வாகனங்களுக்கு ஒளிரும் ஒட்டிகள் (Reflection sticker) ஒட்டப்பட்டன. இந்நிகழ்வில் ஆஸ்டின்பட்டி காவல் சார்பு ஆய்வாளர் கருத்தப் பாண்டி, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் நிலவழி போக்குவரத்து அமைப்பின் நிறுவனர் மாணிக்கம் மற்றும் மதுரை சங்கமம் அரிமா சங்க நிர்வாகி ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!