மக்கள் போக்குவரத்து விதிகளை சரியாக கடைப்பிடிக்காததே தமிழகத்தில் விபத்துக்கள் அதிகரிக்க காரணம் என தூத்துக்குடி மாவட்ட S.P. முரளி ரம்பா பேசினார். 30வது சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி வட்டார போக்குவரத்து துறை சார்பாக சாலை பாதுகாப்பை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கிடையே மாவட்ட அளவிலான நான்கு வகை போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு இன்று 08.02. 2019 மாலை 4 மணிக்கு சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பரிசளிப்பு விழா நடைபெற்றது இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ராம்பா தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
மாணவர்களிடையே சிறப்புரையாற்றுறிய அவர் கூறுகையில் “சாலையில் செல்லும்போது எல்லோரும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும், செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது, அதேபோன்று 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கண்டிப்பாக வாகனங்களை ஓட்டக் கூடாது, மற்ற மாநிலங்களை விட நம் தமிழ்நாட்டில்தான் சாலை விபத்துகள் அதிகமாக நடக்கிறது, இதற்கு முக்கிய காரணம் நம் மாநிலத்தில் சாலை போக்குவரத்து விதிகளை மக்கள்சரியாக கடைப்பிடிப்பதில்லை, நாம் எல்லோரும் ஒரு உறுதிமொழி எடுத்து வீட்டில் அம்மா அப்பா வெளியில் செல்லும் போது ஹெல்மெட் அணிந்து செல்லும் செல்லவும், போக்குவரத்து விதிகளை கடைபிடித்து வாகனம் ஓட்டவும் வலியுறுத்தவேண்டும் ,சாலை போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்தால் தான் விபத்துகளை குறைக்க முடியும் ” என்று கூறினார்
சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் நடத்தப்பட்ட போட்டிகளில் கட்டுரைப் போட்டியில் 38 பள்ளிகளில் 14 மாணவர்களும், 57 மாணவி யர்களும், பேச்சுப்போட்டியில் 38 பள்ளிகளில் 24 மாணவர்களும், 47 மாணவியர்களும், ஓவியப்போட்டியில் 40 பள்ளிகளில் 41 மாணவர்களும் 35 மாணவிகளும், சாலை பாதுகாப்பு வாசகங்கள் எழுதும் போட்டியில் 37 பள்ளிகளில் 19 மாணவர்களும் 50 மாணவிகளும், ஆக மொத்தம் 287 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்
இதில் ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா பரிசுகளை வழங்கினார்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் மன்னர் மன்னன், திருச்செந்துர் வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேல் ,கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன் ,இயக்கூர்தி ஆய்வாளர்கள் ராஜேஷ் ,அமர்நாத், பாத்திமா பர்வின்,செய்திருந்தனர்
தூத்துக்குடி நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் முதன்மை கல்வி அலுவலர் முருகேசன் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சாந்தினி கெளசல், மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவ-மாணவிகள் வட்டாரப் போக்குவரத்துத் துறை கல்வித் துறை மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print















