தாமதப்படும் சாலை பணி.. சாயல்குடி பகுதி மக்களின் வேதனை..

சாயல்குடி அருகே பல மாதங்களாக ரோடு பணி மந்தமாக நடைபெறுவதால், மழைக் காலம் வரை பணி நடந்தால், வெளியில் செல்ல முடியாமல் அவதிப்படுவோமோ, என பகுதி மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம்  சாயல்குடி அருகே முத்துராமலிங்கபுரம், வி.சேதுராஜபுரம், உச்சிநத்தம் உள்ளிட்ட கடைக்கோடி கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகள் மற்றும் இதர பணிகளுக்கு சுமார் 20 கி. மீ., தூரத்திலுள்ள சாயல்குடி, கடலாடி வந்து செல்லவேண்டும் என்ற கட்டாய நிலை உள்ளது. பஸ் வசதி இல்லாததால் அதிக கட்டணம் வாடகை வாகனங்களில் செல்லவேண்டும். இது ஒரு புறம் வேதனையாக இருக்க சாலை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.  பத்து பாலங்களுக்கு மேல் கட்டும் பணி நடக்கிறது. இதனால், வாகனங்கள் வயல் வெளியில் செல்கின்றன. சிறு சாரல் மழை விழுந்தாலும் வயல்வெளி சகதிக்கா டாயாக மாறி வாகனங்கள் செல்ல முடியாது.

இன்னும் ஓரிரு மாதத்திற்குள் மழைக்காலம் தொடங்கிவிடும். 40 சதவீத பணி நடந்துள்ளது. மழைக்காலம் தொடங்கினால் போக்குவரத்து துண்டிக்கப்படும். இதனால் அப்பகுதி மக்கள் பஸ் வசதியின்றி, வாய்க்கால் வரப்புகளில் நடந்தே இதர பகுதிகளுக்கு செல்லும் நிலைக்குத் தள்ளப்படுவர். மாவட்ட நிர்வாகம் பணியை விரைந்து முடிக்க துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!