திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அப்பாவு பிள்ளைப்பட்டியில் இருந்து அவையம்பட்டி பிரிவு வரை இருந்த சாலை முற்றிலும் சேதமடைந்திருந்தது, பல்வேறு கிராமங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமப்பட்டு இந்த சாலை வழியாக தான் பள்ளிக்கு செல்வது, மருத்துவமனைக்கு செல்வது, போன்ற அத்தியாவசிய அவசர தேவைகளை கூட இந்த சாலை வழியாக தான் நிலக்கோட்டைக்கு வரவேண்டும்,
இந்த சாலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு சீரமைப்புபணிகள் நடைபெற்றது, முழுவது தார் சாலை அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது, ஆனாலும் அப்பாவு பிள்ளைப்பட்டி அருகே காலனி பகுதியில் பாலம் கட்டுவதற்காக ஜல்லி கற்களை கொட்டி வைத்ததோடு மட்டும் அல்லாமல் அந்த பகுதியில் மட்டும் ரோடு போடாமலும் விட்டு விட்டார்கள், ஆகையினால் அந்த இடங்களில் ஜல்லி கற்களும் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது, மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்கும்.
இப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் கூறும்போது, பள்ளிக் குழந்தைகள் முதல் கர்ப்பிணி பெண்கள் வரை இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டும் அப்படி செல்லும்போது மிகவும் சிறமப்பட வேண்டி இருக்கிறது, வாகனம் ஓட்டக்கூட மிகவும் சிரமமாக உள்ளது, கிராம மக்கள் நலன் கருதி விரைந்து நடவடிக்கை எடுத்து பாலம் கட்டி அந்த இடத்தை சீர் செய்ய வேண்டும் என்று அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










