மதுரை மாவட்டம் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 வது வார்டு திருவள்ளுவர் நகர் மெயின் ரோடு நேரு நகர் பிரதான சாலையில் இரு இடங்களில் பாதாள சாக்கடை பள்ளங்கள் சுமார் இரண்டு அடிக்கு மேல் இருப்பதால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் மற்றும் காரில் செல்பவர்கள் அந்த பள்ளத்தில் விழுந்து செல்வதால் பெரும் விபத்துக்குள்ளாகிறார்கள்.
மேலும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அதில் விழுந்து காயம் ஏற்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே போன்று பல இடங்களில் உள்ளது. இந்தப் பகுதியில் வாகனங்கள் அடிக்கடி சென்று வருவதால் உடனடியாக அந்த இரு பள்ளங்களை மூடி வைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்








You must be logged in to post a comment.